கீழக்கரை மார்ச், 9
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இம்பாலா சுல்தான் காம்ப்ளக்ஸ் மேல் தளத்தில் அல்-மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி திறப்பு விழா நாளை (10.03.2024) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியும், அரூஸிய்யா தைக்கா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மௌலானா, மௌலவி,V.V.A.சலாஹுதீன் ஆலிம் உமரி தலைமையேற்று பள்ளியை திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள்,சங்கங்களின் பொறுப்பாளர்கள் என அனைத்து சமுதாய பெரியோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
பஜார் பகுதியில் இந்த புதிய பள்ளி அமைந்திருப்பதால் இதனை பஜார் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக இந்த பள்ளி சிறந்தோங்க வேண்டுமென பிரார்த்திப்போம்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.