Spread the love

சென்னை மார்ச், 3

பாரதிய ஜனதா கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வர உள்ளார். மும்பையில் இருந்து புறப்பட்டு மதியம் 2:45 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்லும் பிரதமர், கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாட்டு திட்டத்தை பார்வையிடுகிறார் அதனை தொடர்ந்து சென்னை திரும்பும் அவர் 6 மணியளவில் நந்தனத்தில் இருக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *