கடலூர் ஆகஸ்ட், 25
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது. கடலூர் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குரூப்-1 தேர்வு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து அத்தேர்விற்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில், அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 26 ம்தேதி முதல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் கடலூர் மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.