சென்னை ஜன, 26
75வது குடியரசு தின விழா மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் கோலாகலமாக நடைபெற்றது. பலத்த காவல் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த விழாவில் ராணுவ படைப்பிரிவு, கடற்படை பிரிவு, வான்படை பிரிவினர் கவர்னருக்கு மரியாதை செலுத்த சிறிய வடிவிலான போர்க்கப்பல், விமானம், படகுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் அரசுத்துறை அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.