புதுடெல்லி ஜன, 26
40 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் சாரட் வண்டியில் வந்து பங்கேற்று ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டார். வழக்கமாக இடம்பெறும் ராணுவ பிரிவு பேண்ட் வாத்தியங்களுக்கு பதிலாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண் இசை கலைஞர்களைக் கொண்டு நாதஸ்வரம் நகாடா போன்ற இந்திய இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. மேலும் இந்திய விமான படையை சேர்ந்த 15 பெண் விமானிகள் விமான சாகசங்களை நிகழ்த்தினார்.