கடலூர் ஜன, 25
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் இன்று காலை தைப்பூச ஜோதி தரிசனத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 6, 10 மணிக்கும், மதியம் 1மணி, பின்பு இரவு 7, 10 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டு தோறும் தைப்பூச நாளில் இவ்விழா வெகு விமர்சையாக நடைபெறும். சுமார் 2 லட்சம் பக்தர்கள் இந்த ஆண்டு கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.