கீழக்கரை ஜன, 24
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அருவெறுப்புமிக்க சொறி நாய்கள் உள்ளிட்ட வெறி நாய்கள் என நூற்றுக்கணக்கில் உலா வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இன்னொரு பக்கம் ஊர் முழுவதும் பரவலாக சாக்கடை கழிவுநீர்கள் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நின்று கொசுக்களை உற்பத்தி செய்கின்றன.இதனால் டெங்கு,மலேரியா,டைஃபாய்டு காய்ச்சல்கள் அதிகளவில் பரவுகின்றன.
இதுகுறித்து வாட்சப் போன்ற சமூக வலை தளங்களில் சமூக நல ஆர்வலர்கள், கீழக்கரை நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.
மக்களை அச்சுறுத்தும் சாக்கடை கழிவுகள் மற்றும் சொறி நாய்கள் தொல்லைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்//ராமநாதபுரம்