கீழக்கரை ஜன, 23
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்குள் அமைக்கப்பட்ட ஃபேவர் பிளாக் சாலை திட்ட மதிப்பீட்டு கல்வெட்டில் கீழக்கரை நகராட்சி என்பதற்கு பதிலாக கீழக்கரை ஊராட்சி என எழுதபட்டிருந்ததை நமது வணக்கம் பாரதம் இதழில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
நமது செய்தியின் எதிரொலியாக துரிதகதியில் செயல்பட்டு கீழக்கரை நகராட்சி என எழுதப்பட்ட புதிய கல்வெட்டு பதிக்கப்பட்டது.
இதேபோன்று மக்களின் பிரச்சினைகளுக்கும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்.