சென்னை ஜன, 17
நாட்டின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் சென்னை மைசூர் இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026ம் ஆண்டு மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் சேவை தொடங்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் இரண்டாவதாக இயக்கப்படும் வழித்தடத்தில் தமிழகம் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 435 கிலோ மீட்டர் கொண்ட வழிதடத்தில் சென்னை, பெங்களூர், மைசூர் என ஒன்பது முக்கிய நகரங்களில் இந்த புல்லட் ரயில் நின்று செல்லும்.