புதுடெல்லி ஜன, 11
2024 மட்டும் உலகில் உள்ள 76 நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தோராயமாக 400 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக தெற்காசியாவை சேர்ந்த 100 கோடி மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இந்தியாவில் மட்டும் 90 கோடிக்கும் அதிகமான மக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.