மண்டபம் ஜன, 7
ராமநாதபுரம் மாவட்ட கடலில் நேற்று மணிக்கு 55 கிலோமீட்டர் காற்று வீசியதால் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை. இந்நிலையில் காற்றின் வேகம் குறைந்தது. இதையடுத்து தென்கடல் பகுதியில் மீனவர்கள் இன்று தொழிலுக்கு செல்ல மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும் என மண்டபம் மீனவர் நலத்துறை உதவியகுமார் சிவகுமார் தெரிவித்துள்ளார்.