நெல்லை ஜூலை, 30
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணைய விசாரணை மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
இதில் மனித உரிமைகள் ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு மனித உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளை விசாரித்தார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொடுத்திருந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் அரசு அதிகாரிகள், போலீசார் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணை நடைபெற்றது.
செய்தி:
திரு. ஜான் பீட்டர்.
நெல்லை மாவட்ட செய்தியாளர்