Spread the love

டிச, 30

மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.

மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும்; எலும்புகள் வலுப்பெற உதவும்.

மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன. தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *