சென்னை டிச, 29
விஜயகாந்த் உடல் நேற்று கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்களின் நெருக்கடி அதிகமானதால் இன்று காலை தீவுத்திடல் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக இரவோடு இரவாக தீவுத்திடலில் மேடை அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மக்கள் வரிசையில் நின்ற அஞ்சலி செலுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மதியம் ஒரு மணி வரை அவரது உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தலாம்.