Spread the love

டிச, 22

உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது.

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.

உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.

பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *