சென்னை டிச, 21
தமிழகம் முழுவதும் 1,021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியுள்ளார். 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் எம்ஆர்பி மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிதலமடைந்த மருத்துவமனை கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிய கொரோனா தொற்று குறித்து அச்சம் வேண்டாம் இதுவரை ஒருவருக்கு கூட பரவவில்லை என அவர் தெரிவித்தார்.