துபாய் நவ, 28
ஐக்கிய அரபு அமீரகத்தின் 52 வது தேசியதினத்தை முன்னிட்டு துபாய் மம்ஸார் பகுதியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி டாக்டர் ஷீலா தலைமையில் நடைபெற்ற மிக பிரமாண்டமான அமீரக கொடி கலரில் அணிவகுப்பு பேரணி மற்றும் கொண்டாட்டம்.
இப்பேரணியில் 52 குழந்தைகள் அமீரத்தின் தேசிய கொடியேந்தி, ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கொடியேந்தி அணிவகுப்புடன் பிரமாண்ட பேரணி 52 பெண்கள் 52 நாடுகளின் கொடிகளுடன் வலம் வந்து சாதனையை முறியடித்து கலாமின் உலக சாதனை ஆணையத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக அமீரகத்தைசேர்ந்த துபாய் போலீஸ் தலைமையகம் உமர், காலித், சலீம், KFN மருத்துவமனை தலைமை அம்னா முஹம்மது, ஹலீமா, மேலும் சிறப்பு விருந்தினர்களாக அமீரக திமுக அமைப்பாளரும், புலம்பெயர் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ் எஸ் மீரான், மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா ஆசாத், SMB Curtains ரபீக், SRM Construction நிர்வாக இயக்குனர் மேனகா ரமேஷ், கேப்டன் டிவி தலைமை நிருபர் கே.வி.எல். கமால், ஆர்எஸ்எம் ஆட்டோ கேரேஜ் நிறுவனர் ரமேஷ், மக்கள் ஆர் ஜே சாரா, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, எமிரேட்ஸ் நியான் உஸ்மான் அலி, புர்ஜ் கலீபா மேலாளர் முபாரக், கல்ப் கட்ஸ் நிறுவனர் பிரவின், டிக்டாக் பிரபலங்கள் கருவாயன், துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள், கள்ளக்குறிச்சி சின்னா, அமீரக பாடகி மிருதுளா, உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
இது ஒரு வெற்றிகரமான நிகழ்வாக இருந்ததில் பெருமிதம் கொள்கிறோம் என்று அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி டாக்டர் ஷீலா கூறி நிகச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்கள் அனைவர்க்கும் நன்றிகளை தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.