துபாய் நவ, 26
ஐக்கிய அரபு அமீரக துபாய் ஹமரெய்ன் சென்டரில் இருக்கும் பிரிஸ்டல் ஹோட்டல் உட்புறத்தில் சைல்லர்ஸ் லகூன் என்ற பல நாடு சுவைகொண்ட உணவகம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சமூக ஊடகவியர்கள், ஊடக நெறியாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆரவாளர்கள், வானொலி தொகுப்பாளர்கள், நிகழ்ச்சிகள் ஏற்பாட்டளார்கள், யூடுப்பார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த உணவகத்தை பற்றி அதன் நிர்வாக இயக்குனர் வெங்கட் கூறுகையில்,
சைல்லர்ஸ் லகூன் உணவகம் அனைத்துத்தரப்பு மக்களும் குடும்பத்துடன் சேர்ந்து உணவருந்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டதாகும், இது அதிகப்படியாக கடல்சார்ந்த உணவு வகைகளையும், மேலும் கடல்சார்ந்த உணவு வகைகள் தேர்வுசெய்து நேரடியாக வாடிக்கையாளர்கள் முன்னிலையில் தயார்செய்து சாப்பிடும் அமைப்பை பெற்றுள்ளதாக மற்றும் உணவு வகைகளை பொறுத்தவரை தென்னிந்திய உணவுவகைகளை கொண்டதாக இருக்கும் என்று கூறினார். மேலும் இந்த உணவகம் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளும் அமைப்பை பெற்ற உணவகமாகும். மேலும் இந்த உணவகத்தில் சாப்பிடும்போது கடல் தீவுகளில் சென்று குடும்பத்துடன் சென்று உணவருந்தும் உணர்வைத்தரும் என்றும் கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக The Smiles குரூப் தலைமை அதிகாரி இஸ்மாயில், துபாய் ஈமான் பொதுச்செயலர் ஹமீது யாசின், கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், எழுத்தாளர் குழுமம் நிர்வாகி ஆசிப் மீரான், TAM ஷாநவாஸ், Spread Smiles மக்கள் ஆர்ஜே சாரா, தினத்தந்தி ராம், தினகுரல் நாளிதழ் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, கில்லி எப்எம் ஆர்ஜேக்கள் மற்றும் நிர்வாகி, ஆர்ஜே அஞ்சனா, ஹோப் கௌஸர் மற்றும் ராசிக், கள்ளக்குறிச்சி சின்னா, வணக்கம் ஹபீபீ இபு, துபாய் புல்லிங்கோ ஷாநவாஸ் மற்றும் அயாஸ் மற்றும் ஊடக பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு உபசரித்து நிர்வாக இயக்குனர் வெங்கட் நன்றிகளை தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.