கீழக்கரை ஆகஸ்ட், 22
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, திருப்புல்லாணி வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டம் கடந்த சனிக்கிழமை பெரியபட்டிணம் ஜலால் ஜமால் பள்ளிவாசலில் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஷாஜஹான், பொதுச் செயலாளர் ஜைனுல் ஆலம் ஆகியோர் முன்னிலையில் வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவரும் கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத் தலைவருமான ரத்தின முஹம்மது தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இதில் கீழக்கரை டவுன் காஜியும் பெரிய ஜும்ஆ பள்ளி மஹல்லி, முத்தவல்லியுமான காஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி தலைவராகவும், கொட்டியகாரன் வலசை ஜமாஅத் தலைவர் அமானுல்லாஹ் செயலாளராகவும், பெரியபட்டிணம் ஜமாஅத் தலைவர் முஹம்மது மீரா சாஹிப் பொருளாளராகவும், எக்ககுடி ஜமாஅத் சிக்கந்தர் துணைத் தலைவராகவும், கீழக்கரை தெற்குத்தெரு ஜமாஅத் (பரிதா ஸ்டோர்) முஹம்மது சுபைர் துணைத் செயலாளராகவும் கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் தலைவர் ரத்தின முஹம்மது கௌரவ ஆலோசகராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.