ராமநாதபுரம் ஆகஸ்ட், 19
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு சார்ந்த நிகழச்சியில் கலந்துக்கொள்ளுவதற்காக வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, கீழக்கரை
மருத்துவமனையில் சிறப்பு அம்சங்களுடன் கூடிய நவீன வசதிகள் மாற்றி அமைத்து தரும்படி கோரிக்கையினை முன் வைத்தார்.
அக்கோரிக்கையினை ஏற்ற அமைச்சர் இது சம்பந்தமாக உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்கள்.
மேலும் இந்த சந்திப்பின் போது, நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.