Spread the love

கத்தார் நவ, 1

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள சபாரி மாலின் 13வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக சமையல் போட்டி ஒன்றை நடத்தினர்.

இந்த சமையல் போட்டியில் Starters, Main Course, Most Innovative Course என்று மூன்று பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கத்தாரில் வசிக்கும் இந்திய பெண்மணிகள் உட்பட பலர் கலந்துகொண்டு பல்வேறு விதமான உணவுகள் செய்து அசத்தினர்.

மேலும் கலந்துகொண்டவர்களில் கத்தார் தலைநகர் தோஹாவில் வசிக்கும் இந்திய பெண்மணியான தமிழ் நாட்டைசேர்ந்த சிக்கந்தர் மனைவி பல்கிஸ் பெனாசிர் இரண்டாம் பரிசை வென்றார். இராண்டாம் பரிசு வென்ற பெனாசிருக்கு சபாரி மால் நிர்வாகம் பரிசு மற்றும் சான்றிதழ் அளித்து கௌரவித்தனர்.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *