சென்னை அக், 31
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 7 மற்றும் எட்டாம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் மூலம் அதிக முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டுவர மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.