இலங்கை அக், 24
இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல விசா தேவை இல்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான் இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் விசா தேவையில்லை. சோதனையின் முயற்சியாக மார்ச் 31 வரை இத்திட்டத்தை அமல்படுத்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பு பொறுத்து திட்டத்தில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.