Spread the love

அக், 24

கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது கிராமப்புறங்களில் முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் குணங்கள் கொண்டது.

* கல்யாண முருங்கையில் சுண்ணாம்புச்சத்து, நார்சத்து, இரும்புசத்து அதிகம் உள்ளது. கல்யாண முருங்கையானது கர்ப்பபை பிரச்சனைகளை சரிசெய்யும்.

* கல்யாண முருங்கை இலை, முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு இவற்றை சூப்வைத்து குடித்தால் ரத்தசோகை குணமாகும்.

* கல்யாண முருங்கை இலையுடன் மிளகு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் பனி மற்றும் மழை காலத்தில் சளித்தொல்லை இருக்காது.

* கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் பின் குளித்தால் உடலில் ஏற்படும் தோல் நோய்களான சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

* கல்யாண முருங்கை இலையுடன் ஒரு தேக்கரண்டி தண்ணீரில் ஊறவைத்த வெந்தயம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுத்தல், வெட்டை நோய்கள் குணமாகும்.

* கல்யாண முருங்கை இலைகளை இலேசாக வதக்கி, இளஞ்சூட்டில் பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் கீல்வாயு குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *