ராமநாதபுரம் அக், 22
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்டம் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலர் ஜெயபாரதன், மகளிர் அணி செயலாளர் செந்தாமரை பேசினர். கருவூல மூலம் ஊதியம் வழங்க வேண்டும், பணிச்சுமைகளை குறைக்க வேண்டும் தென்மண்டல மாநாடு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன