ராமநாதபுரம் அக், 20
ராமநாதபுரம் நகராட்சி மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.219.29 கோடி மதிப்பீட்டில் தஞ்சை புகலூர் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி காண பூமி பூஜை நேற்று நடைபெற்றது. சட்டமன்ற தலைவர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் நகர மன்ற தலைவர், ஆணையர், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.