மதுரை அக், 18
ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 21 முதல் 22 திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூரிலிருந்து சென்னைக்கு 300 சிறப்பு பேருந்துகளும், அக்டோபர் 20 முதல் 22 திருச்சியிலிருந்து கோவை மதுரைக்கு 200 சிறப்பு பேருந்துகளும், அக்டோபர் 24முதல்25 சென்னையில் இருந்து 300 மற்ற வழித்தடங்களிலிருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.