திருப்பூர் அக், 17
தமிழ்நாட்டில் வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் செய்வோம் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். திருப்பூரில் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி உங்களில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாரிசு அரசியல் போல அல்லாமல் சாதாரண விவசாயி மகனை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். நாட்டிலேயே ஊழல் அதிகம் செய்யும் கட்சி திமுக. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என தெரிவித்துள்ளார்.