கீழக்கரை அக், 14
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் முகமது சதக் அறக்கட்டளை பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் போது பெருமிதமாக தமிழ்நாட்டில் முதல்முறையாக டிப்ளமோ இன் ஆர்கிடெக்சர் பாடப்பிரிவு நடப்பாண்டு துவக்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றி கல்லூரிகளின் நிறுவனத் தலைவர் எஸ் எம் யூசுப் சாகிப் கூறுகையில்,
தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டார கிராமப்புற மக்களின் பொருளாதார கல்வி மேம்பாட்டிற்காக வள்ளல் பாரம்பரியம் கொண்ட முகமது சதக் குடும்பத்தாரால் 1973 அக்டோபர் 26 ல் தொடங்கப்பட்டது. பின் தங்கிய பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்ட போற்றுதலுக்கும் பெருமைக்கும் உரிய முகமது சதக் அறக்கட்டளையானது 50 ஆண்டு நிறைவடைந்து பொன்விழா காண்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், மேலும் தமிழ்நாட்டிலேயே முதல் முதலாக தொடங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரி என்ற பெருமையை உடைய கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி 1984 ம் ஆண்டு முதல் இன்று வரை பல இளநிலை முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடக்கத்தில் இருந்து இன்று வரை தேசிய மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்நோக்கும் சிறப்புமிக்க தரமான தொழில் கல்வியை பொறியியல் கல்லூரிகள் தொழில்நுட்பக் கல்லூரியும் வழங்கி வருகிறது. மேலும் மேல்நிலைப்பள்ளி தொடங்கி பொறியியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பார்மசி, பிசியோதெரபி, நர்சிங், மருத்துவ அறிவியல் கல்லூரி உட்பட 17 கல்வி நிறுவனங்கள் எங்கள் அறக்கட்டளை கீழக்கரை ராமநாதபுரம் மற்றும் சென்னையில் சீரோடும் சிறப்போடும் நடத்தி வருகிறது சாதி சமய இன வேறுபாடு இன்றி சேவை மனப்பான்மையுடன் தரமான கல்வியை வழங்கி நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவது முகமது சதக் அறக்கட்டளையின் நோக்கமாகும்.
அறக்கட்டளை முதல் கல்லூரி ஆக 1980ல் ஆரம்பிக்கப்பட்டது நிறுவனம் முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ஆகும். பொன்விழாவை ஒட்டி தமிழ்நாட்டில் முதல்முறையாக டிப்ளமோ இன் ஆர்கிடெக்சர் பாடப் பிரிவு நடப்பாண்டு துவக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.