அரியலூர் அக், 3
தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று கண்காணிக்கும் படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒரு கிராமத்தில் மூன்று பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அங்கு மருத்துவ முகாம் அமைக்கவும் அக்டோபர், நவம்பரில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.