Spread the love

ஆக, 31

தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும். உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை. அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம்.

பகல் பொழுதில் உண்ணும் முதல் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைக் குறைக்கும். மேலும், மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள், சொறி முதலிய நோய்களும், சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீரும்.

மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும். மன உளைச்சல், வயிற்றெரிவு, எலும்புருக்கி, மூலரோகம், ரத்த வாந்தியும் நிற்கும். சருமம் பளபளப்பாகும். கண்களுக்கு அதிக திறனும் உண்டாகும்.

இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் நெய் சேர்ப்பது நல்லதல்ல. கொழுப்பை அதிகரித்து அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதே சமயம், நோய் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள் என்றால், அவர்கள் எந்த பயமும் இல்லாமல் தினமும் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும்.

நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *