கீழக்கரை ஆக, 29
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் இருக்கும் காஞ்சிரங்குடி மகான் பக்கீரப்பா தர்ஹாவில் வருடம் தோறும் மதநல்லிணக்க கொடியேற்ற விழா நடைபெறுவது வழக்கம்.
நேற்று (28.08.2023) மாலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு தமிழக தர்ஹாக்கள் கூட்டமைப்பின் தலைவர் முத்துப்பேட்டை பாக்கர் அலி தலைமை வகித்தார். மாவட்ட அரசு காஜியும் அரூஸிய்யா தைக்கா அரபிக்கல்லூரி முதல்வருமான அல்ஹாஜ் சலாஹுதீன் ஆலிம் துஆ ஓதியதும் கொடியேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை காஞ்சிரங்குடி ஜமாத் மற்றும் ஊர் பொதுமக்கள் சுற்று வட்டார கிராம அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து செயல்படுத்தினர்.
இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஜஹாங்கீர்.
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.