துபாய் ஆக, 28
ஐக்கிய அரபு அமீரக துபாயில் தோழர் அருணன் கலந்துகொண்ட இந்திய நல்வாழ்வு பேரவை (IWf) கலந்தாய்வு கூட்டம் துபாயில் அன்னபூர்ண உணவகத்தில் அமீரக தலைவர் அதிரை அப்துல்ஹாதி தலைமையில் திண்டுக்கல் ஜமால் திருக்குர்ஆன் ஓத நடைபெற்றது
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து மக்கள் ஒற்றுமை மேடையினுடைய ஒருங்கிணைப்பாளர் தோழர் பேராசிரியர் அருணன் ஊக்கமூட்டும் பேச்சாளர் ராஜேஷ் பெர்னான்டோ கலந்துகொண்டு உரையாற்றினர்.
மேலும் அமீரக தேமுதிக செயலாளரும் கேப்டன் டிவி முதன்மை நெறியாளருமான கமால் கேவிஎல், வணக்கம் பாரதம் வளைகுடா இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அமீரகத் துணைத் தலைவர் A.S.இப்ராஹிம் அமீரக பொருளாளர் சகோதரர் டாக்டர் அப்துல் காதர் மற்றும் துபாய் மன்டல தலைவர் உமர் பாரூக் அவர்கள் முன்னிலை வகித்தனர் மற்றும் துபாய் அபுதாபி அல்அய்ன் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
பேராசிரியர் அருணன் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு நிர்வாகிகள் புத்தகங்களை வழங்கி கெளரவித்தார்கள் மற்றும் பேராசிரியர் அருணன் ஆகியோருக்கு IWF UAE சார்பாக நினைவு பரிசு வழக்கப்பட்டது. இறுதியாக அமீரக பொருளாளர் சகோதரர் டாக்டர் அப்துல் காதர் நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.