கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 19
திருக்கோவிலூரில் ரூ.1 கோடியே 92 லட்சம் செலவில் அறிவு சார் மையம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டது. இதற்கான கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் கீதா, துணை தலைவர் உமா மகேஸ்வரி குணா, நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.