கீழக்கரை ஆக, 15
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வட்டாட்சியர் பழனிக்குமார் தேசிய கொடியேற்றி சமூக நல பணிகளில் ஈடுபட்டு வரும் சமூக நல அமைப்புகள் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
மேலும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட KLK வெல்ஃபேர் கமிட்டியின் கௌரவ தலைவர் அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார்.
பல்வேறு சமூக நல பணிகளை கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை மூலம் செய்து வரும் KLK வெல்ஃபேர் கமிட்டியின் சமூக நல பணியினை பாராட்டி வட்டாட்சியர் பழனிக்குமார் கேடயம் வழங்கினார். அதனை அவை தலைவர் அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர்,தலைவர் சாகுல் ஹமீது ஆலிம்,செயலாளர் ஜஹாங்கீர் அரூஸி, பொருளாளர் ஹாஜி ஷஃபீக் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா கொடியேற்றி வைத்தார். துணை தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் செல்வராஜ், பொறியாளர் அருள், சுகாதாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓய்வு ஆசிரியர் ஹதீஜத்து பாத்திமா தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி தாளாளர் அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் கொடியேற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளி தலைமையாசிரியர் ஜாக்குலின் லதா பெஸ்டஸ் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். மாணவியர்களின் கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.
இதேபோன்று இஸ்லாமியா பள்ளி, மக்தூமியா பள்ளி, ஹைராத்துல் ஜலாலியா பள்ளி, முகைதீனியா மெட்ரிக் பள்ளி, தீனியா, நூரானியா பள்ளிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கீழக்கரை பாரம்பரிய பண்டகசாலை சிற்றுண்டி உணவகத்தில் தேசியக்கொடியின் மூவர்ண நிறத்தில் இனிப்பு தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜஹாங்கீர்
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.