சென்னை ஆக, 15
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் தலைமையில் நிதி செலவினம் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படும். தற்போது பருவமழை தொடங்க உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தொற்றுநோய் பரவாமல் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.