Spread the love

ஆக, 13

வெந்தயம் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள். இதில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது.

வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது.

இருதய பிரச்சனை, மூட்டு வலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு நல்ல மருந்து. இதனை தினமும் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தண்ணீர் கொண்டு முழுங்கலாம்.

நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களின் டயட்டில் ஏதாவது ஒரு வகையில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது அவசியம். இதனை பொடித்து மோருடன் கலந்து சாப்பிடலாம்.

வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கும் கெட்ட கொழுப்பு நீக்கும். மேலும் கொழுப்பு நிறைந்துள்ள உணவில் இருக்கும் டிரைகிளரசைட் என்ற கொழுப்பினை ரத்தத்தில் சேர்க்காமல் பாதுகாக்கும்.

வெந்தயத்தில் அமினோ அமிலம், உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ள உதவும்.

நார்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும்.

அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலிக்கு வெந்தய கஷாயம் மிகவும் நல்லது. வெந்தய பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *