ஆக, 12
பழங்களில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு பழத்திலும் வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் நோய்களைக் குணப்படுத்துவதற்கு மட்டுமல்ல, நோயிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது. அன்னாசிப்பழம் மிகவும் மருத்துவ குணம் கொண்ட பழங்களில் ஒன்று. இந்த தொகுப்பில், அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
இந்த பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி கண் பார்வையை மேம்படுத்துவதோடு கண்புரையை குணப்படுத்தவும் உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க
அன்னாசிப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது.
இதய நோய் மற்றும் மாரடைப்பு போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.
அன்னாசிப்பழத்தில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன, குறிப்பாக வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் ப்ரோமெலைன் போன்ற நொதிகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அன்னாசிப்பழத்தில் ப்ரோமைலின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது சுவாச நோய்களைத் தடுக்கிறது. அன்னாசிப்பழம் சுவாசக் குழாய், சைனஸ், சளி மற்றும் இருமல் ஆகியவற்றின் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று அன்னாசி. அன்னாசிப்பழம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, இதனால் இதய நோய் அபாயத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது. எனவே தினமும் அன்னாசிப்பழம் சாப்பிடுவது நல்லது.
அன்னாசிப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, மூட்டுவலி நோயாளிகள் உட்கொள்ளும் போது, அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் மூட்டுகள் வலுவடையும்.
அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் நமது பற்கள் மற்றும் ஈறுகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இந்த அன்னாசி பழம் மலச்சிக்கலை குணப்படுத்தவும், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.
எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கிறது
இப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலியை குணப்படுத்துகிறது.
அன்னாசிப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது புண்கள் மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.