கீழக்கரை ஆக, 2
KLK வெல்ஃபேர் கமிட்டியின் கோரிக்கைகளில் ஒன்றான போக்குவரத்து நெரிசல் குறித்த தொடர் ஆலோசனை கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கீழக்கரை நகராட்சி அலுவலகங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று (01.08.2023) காலை 11.30 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் ஒருபக்க பார்க்கிங் விசயத்தில் காவல்துறை முனைப்பு காட்டுவதோடு நோ பார்க்கிங் ஏரியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தும் பைக்,ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட காவல்துறை இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் மைக் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள்,பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் முக்குரோட்டிலிருந்து குயின் டிராவல்ஸ் அலுவலகம் வரை ரோட்டின் இருபக்கமும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதோடு இனி எந்த காலத்திலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணிக்கப்படுமென்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் காவல்துறை ஆய்வாளர் சரவணன், சுகாதாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா, KLK வெல்ஃபேர் கமிட்டி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.