ராமேஸ்வரம் ஜூலை, 28
என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைப்பயணம் தொடங்குகிறார். 234 தொகுதிகளிலும் மோடி அரசின் சாதனைகளை எடுத்துரைக்க உள்ளார். இந்நிலையில் இன்று தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையின் நடைப்பயணத்தை தொடங்கி வைக்கிறார்.