ராமநாதபுரம் ஜூலை, 23
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டம் மின் நுகர்வோர்களுக்கு சிறப்பு முகாம் அறிவிப்பு. மின் இணைப்பு மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் அந்தந்த பிரிவு அலுவலகங்களில் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அறிவித்துள்ளார்.