சென்னை ஜூலை, 23
சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த திட்டமானது கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் ஆர்பிஎப் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதன் மூலம் திருட்டு வழிப்பறி போன்ற சம்பவங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.