Spread the love

ஜூலை, 20

வெள்ளை சர்க்கரையைக் காட்டிலும் நாட்டுச் சர்க்கரையில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க நினைப்போர் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துதல் நல்லது.

நமக்கு ஆஸ்துமா பிரச்னை, மூச்சு வாங்குதல், நுரையீரல் போன்ற பிரச்னைகள் இருப்பின் நாட்டுச் சர்க்கரை எடுத்துக்கொள்வது நல்லத். எனவே தினசரி டீ, காஃபிக்குக் கூட நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.

நாட்டுச் சர்க்கரை கருப்பை தசைகளை தளர்வாக்கி வலியில்லா மாதவிடாய்க்கு வழிவகுக்கிறது. எனவே மாதவிடாய் சமயத்தில் நாட்டுச் சர்க்கரை சாப்பிட்டால் நல்லது.

அஜீரணம், வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு நாட்டுச்சர்க்கரை உதவும்.

சிலர் எப்போதும் சுருசுருப்பு இல்லாமல் சோர்வாக இருப்பார்கள் அல்லது தொடர் வேலை களைப்பு இருந்தாலும் ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சாப்பிட களைப்பு , சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

சளி , இருமல் நீங்கும் : வீட்டில் ஓமம் இருந்தால் அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்துப்பாருங்கள். சளி , இருமல் சரியாகும்.

நாட்டுச் சர்க்கரையில் விட்டமின் பி இருப்பதால் சருமச் செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே ஸ்கிரப் அல்லது ஃபேஸ் பேக்குகளில் வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தலாம். வாழைப்பழத்தை குழைத்து அதில் நாட்டுச்சர்க்கரை கலந்து முகத்தில் அப்ளை செய்தால் கூட போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *