Spread the love

ஜூலை, 18

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக விளங்குவது பார்லி, இந்த பார்லி டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் தினமும் சாப்பிட்டு வரலாம்.

தினமும் பார்லியை உட்கொண்டு வந்தால் உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம். மேலும் இந்த பார்லி இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இந்த பார்லி அரிசி கஞ்சி சிறுநீரகத்தின் செயலாற்றலை ஊக்குவிக்கிறது.

அதேபோல் செரிமான கோளாறுகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. எனவே தினமும் பார்லி கஞ்சி உட்கொள்வதால் உடலில் ஆரோக்கிய சக்திகளை அதிகரிக்கலாம், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தவிர்த்து கொள்ளலாம், முக்கியமாக உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

இயற்கையாகவே பார்லியில் (barley benefits) இருக்கும் ஊட்டச்சத்துக்கள் புற்று நோய்களை எதிர்த்து போராடும் தன்மை உடையது. எனவே தினமும் பார்லி அரிசி கஞ்சி (barley drink) சாப்பிட்டு வர மார்பக மற்றும் ஹார்மோன் புற்றுநோய்கள் வராமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது, மேலும் பார்லி கஞ்சி (barley drink) தினமும் சாப்பிட்டு வர இதய கோளாறுகள் மற்றும் இதய பாதிப்புகள் வராமலும் பாதுகாக்க உதவுகிறது.

பார்லியில் இருக்கும் நியாஸின் உடலில் கொலஸ்ட்ரால் அளவை ஒட்டுமொத்தமாக குறைத்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.

பார்லியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. எனவே தினமும் பார்லி அரிசி கஞ்சி அருந்தி வர இரத்த கொழுப்பை குறைக்கவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் செய்கிறது, இதனால் உடல் எடையை குறைக்கவும் பார்லி பெரிதும் உதவுகிறது.

பார்லியில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுவூட்டுகிறது, இதனால் அடிக்கடி வரும் இருமல், காய்ச்சல், சளி போன்றவை வராமல் நம்மை பாதுகாக்கிறது.

பார்லியில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தின் அடர்த்தியை சீராக்குகிறது.

இதனால் இரத்த சோகை, மயக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் பார்லி சிறுநீரகத்தின் செயலாற்றல் மேம்படவும் பயனளிக்கிறது.

தினமும் அன்றாட உணவில் பார்லியை சேர்த்து கொள்வதினால் பித்தப்பையில் கற்கள் சேராமல் உடல் நலத்தை பாதுகாக்க முடியும்.

பார்லியில் உள்ள புரதம் பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. எனவே பித்தப்பையில் கற்கள் வராமல் இருக்க தினமும் பார்லி அரிசி கஞ்சி உணவாக சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *