ஜூலை, 17
உடலின் நச்சு நீக்கியாக செயல்பட்டு மேனியை பளபளப்பாக வைத்திருக்க இந்த தேங்காய் பயன்பாட்டு மருத்துவ முறையை தமிழ் மருத்துவம் பரிந்துரைக்கிறது. தேங்காயை சிறு துண்டுகளாக்கி அதை நன்னீர் ஊற்றி நன்கு மசிய அறைத்து சாறு எடுத்து சிட்டிகை ஏலக்காய் தூள், பனை கருப்பட்டி கலந்து காலை, இரவு இருவேளை தொடர்ந்து பருகி வந்தால் உடல் தெளிவும் பொலிவும் பெறும் அத்துடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பும் குறையும்.