புதுடெல்லி ஜூலை, 27
பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்க எடுத்துள்ளதாக மத்திய அமைங அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும் சேவைகளை விரிவுப்படுத்தவும் ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பி.பி.என்.எல் & பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்களை இணைக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
5 ஜி அலைக்கற்றை இதுவரை ரூ 1.49 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் 9-வது சுற்று ஏலம் நடைபெற்று கொண்டிருக்கிறது என தொலைதொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.