கீழக்கரை ஜூலை, 12
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் வருடம் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
மக்கள் சேவை அறக்கட்டளை துவங்கி 20ம் ஆண்டினை முன்னிட்டு ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அறக்கட்டளையின் நிறுவனர் M.K.E.உமர் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஜாக்குலின் லதா பெஸ்டஸ் அனைவரையும் வரவேற்றார். துபாய் அலைட் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் ஏ.ஜே.கமால், ராமநாதபுரம் லயன்ஸ் கிளப் பொருளாளர் பாலகிருஷ்ணன், கீழக்கரை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ரவீந்திரன், SDPI மாநில துணைதலைவர் அப்துல்ஹமீது, வணக்கம் பாரதம் இதழ் அமீரக செய்தியாளர் நஜீம் மரிக்கா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி மௌலானா சலாஹுதீன் ஆலிம் சிறப்புரையாற்றினார். கீழை ஜஹாங்கீர் அரூஸி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியை அன்பர்நிஷா பேகம் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கும் ஜாதி, மதம் பேதமின்றி கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
ஜஹாங்கீர்
மாவட்ட நிருபர்/ ராமநாதபுரம்.