ஜூலை, 8
தயிர் உட்கொள்வது சரும வறட்சியைத்தை தடுத்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் தோல் அரிப்பு குணப்படுத்தப்படுகிறது.
தோல் ஆரோக்கித்திற்கு அவசிமான ஊட்டச்சத்தை உறுதி செய்கிறது.
இதில் உள்ள துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு நன்மை பயக்கிறது மற்றும் ஊட்டமளிக்கிறது.
தயிரில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் தினமும் உணவில் சேர்த்து கொள்வது பற்களை பலப்படுத்துகிறது. எலும்புகளை வலிமையாக்கி கீல்வாதத்தைத் தடுக்க உதவுகிறது.
தினமும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
மேலும் இரத்த அழுத்தத்தையும் பராமரிப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தயிரில் உள்ள சத்துக்கள் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கிரேக்க தயிர் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாகவும், நீரிழிவு நோயாளிகளின் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
தயிர் என்பது ஒரு பல்துறை உணவாகும். இதை உணவு பொருட்களிலும், பானங்களிலும், சிற்றுண்டிகளிலும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
தயிரை சர்க்கரை அல்லது உப்புடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ உட்கொள்ளலாம். பல்வேறு வகையான இனிப்பு உணவுகளை தயாரிக்க தயிரை பயன்படுத்தப் படுகிறது. தயிரில் தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது பல்வேறு அழகு சாதனப் பொருட்களின் முக்கிய அங்கமாக பயன்படுத்தப் படுகிறது.
தயிர் பேஸ் மாஸ்க் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது. தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெயில் காலங்களில் உடல் உஷனத்தை குறைக்க குளிர் பாணங்களில் பயன்படுத்தப்படுகிறது. பாலிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் தயிர் பாலை விட எளிதில் ஜீரணம் ஆகும்.
பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கொண்டால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும். வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.