ஜூலை, 7
காலையில் எழுந்த உடனே சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது. அதில் ஏராளமானோர் காபி பிரியர்கள். காலை மட்டுமின்றி ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கோப்பை காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர்.
சோர்வாக இருக்கும் போது, ஒரே ஒரு கப் காபி போதும். இன்ஸ்டன்ட் எனர்ஜியை காபி வழங்கும். காபியில் அடினோசின் என்ற ஒரு நியூரோடிரான்ஸ்மிட்டர் உள்ளது. இது நரம்புகளை ஊக்கப்படுத்தி, சோர்வை நீக்கி உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது. காபி குடிப்பது எவ்வாறு உடலுக்கு ஆற்றலை அளிக்கிறதோ, அதே போல மனதை தெளிவாக வைக்க உதவுகிறது.
காபி குடிப்பதால் உடலில் என்ன விளைவுகள் ஏற்படும் என்று பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், காபி குடிப்பதால் நீரிழிவு ஏற்படும் அபாயம் குறைகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. நரம்புகளைத் தூண்டி ஆற்றலை அதிகரிக்கும். இதனால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். அது மட்டுமின்றி, மூளை சம்மந்தப்பட்ட நோய்களான டிமென்ஷியா, அல்சைமர் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும்.
காபி உடலில் உள்ள வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்கள் உடல் எடை குறையும் மற்றும் கட்டுக்குள் இருக்கும். அது மட்டுமின்றி, தினசரி அதிக அளவில் காபி குடிப்பது உடலில் கொழுப்பை தங்க விடாமல் பார்த்துக்கொள்ளும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காபி உடலில் உள்ள வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்கள் உடல் எடை குறையும் மற்றும் கட்டுக்குள் இருக்கும். அது மட்டுமின்றி, தினசரி அதிக அளவில் காபி குடிப்பது உடலில் கொழுப்பை தங்க விடாமல் பார்த்துக்கொள்ளும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காபியின் மணமே மனதை நிறைக்கும். அதில் உள்ள காஃபீன் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் ஆகியவை மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வை நீக்குகிறது. அது மட்டுமின்றி, காபி குடித்த உடனேயே உடல் ரீதியான சுறுசுறுப்பை பெறுவதால், சோர்ந்து போன மனதுக்கு தெம்பை அளித்து, உற்சாகமாக மாற்றுகிறது.
காபி குடிப்பது உடலுக்கும் மனதுக்கும் ஆற்றல் தருவதோடு மட்டுமல்லாமல், உங்கள் செரிமான உறுப்புகளையும், கல்லீரையும் பாதுகாக்கிறது.7/ 8
உள் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கிறது: காபி குடிப்பது உடலுக்கும் மனதுக்கும் ஆற்றல் தருவதோடு மட்டுமல்லாமல், உங்கள் செரிமான உறுப்புகளையும், கல்லீரையும் பாதுகாக்கிறது.
உங்கள் இதயத்தை பாதுகாக்கிறது: காபி குடிப்பது இதய நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் பாதுகாக்க உதவுகிறது. தினமும் 3 முதல் 5 கோப்பைகள் வரை காபி குடிப்பது இதய நோய் ஏற்படாமல் 15% வரை தடுக்கிறது.