சென்னை ஜூன், 12
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று ஆறாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. சுமார் 40 நாட்களுக்கு மேல் விடுமுறையை ஜாலியாக கொண்டாடிய மாணவர்கள் இன்று தங்களது புதிய வகுப்பில் அமர இருக்கின்றனர். மாணவர்கள் வருகையை ஒட்டி அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.